சென்னை: தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம், யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுக. பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம், யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.