தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுபான கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் கொள்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 500 மதுபான கடைகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தொடர்ந்து இரண்டு கூட்டங்கள் நடைபெற்றிருந்தன.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மதுபான கடைகளில் 500 கடைகளை மூடக்கூடிய கணக்கெடுப்பு பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்திருந்தது. ஜூன் 3ம் தேதி கடைகள் மூடப்படும் என அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டியலானது தயாரிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், 500 மதுபான கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பானது ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என அமைச்சர் செந்திபாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து மதுபான கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: