The post தமிழ்நாட்டில் அதிதீவிர படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் காவலர் ரூபா appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் அதிதீவிர படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் காவலர் ரூபா

- கான்ஸ்டபிள்
- ரூபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாமக்கல்
- நாமக்கல் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை
- சேலம் மாவட்டம்
- மேட்டூர் அதி தீவிரம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர் ரூபா (திருநங்கை) சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அதிதீவிரப்படை பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிதீவிர படை பயிற்சி முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை காவலர் ரூபா பெற்றுள்ளார். பயிற்சி முடித்த அவர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன் காவல் ஆய்வாளர் முரளி குமார் ஆகியோர் உள்ளனர்.