பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அவ்வப்பொழுது வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அறிவியல்சார்ந்த, தொழில்நுட்ப நிறுவனங்களில் தரங்களை ஒருங்கிணைத்து தீர்மானிப்பது மன்றத்தின் முக்கிய செயல்பாடாகும். அதன் அடிப்படையில், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் பன்னீர்செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தனியார் தொழில்நுட்ப நிறுவன முதன்மை ெசயல் அதிகாரி முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், ஆகிய 4 பேர் மன்றத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உள்பட 4 பேர் நியமனம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.