×
Saravana Stores

தமிழகத்தில் வெயில் 2 வாரங்களுக்கு தொடர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெயில் 2 வாரங்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப். 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் காரணமாக அசவுகரியங்கள் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 12.09.2024 முதல் 16.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் 100°F க்கும் மேல் வெப்பநிலை பதிவானது. மேலும் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

The post தமிழகத்தில் வெயில் 2 வாரங்களுக்கு தொடர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,
× RELATED மிக கனமழை பெய்யும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் வாய்ப்பு