- குறைந்த காற்று: வானிலை
- சர்வே
- மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வங்கி:
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று(நவ.09) மற்றும் நாளை((நவ.10) ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்து்ககு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.