இதில் அனைத்து பள்ளிகளின் 11ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க முடியும். அதேபோல, திறனாய்வு தேர்வு தமிழ் தவிர்த்த பிற பாடங்கள் அனைத்திற்கும் சேர்த்து நடத்தப்படுவதாகும். இந்த தேர்வில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும். ஒரு மாணவனுக்கு ஓராண்டுக்கு ரூ.10ஆயிரம் வீதம் ஆண்டுகளுக்கு ரூ.20,000 பரிசு மொத்தம் 1000 பேருக்கு மட்டும் வழங்கப்படும். அதனால் திறனறி தேர்வுக்கு திறனாய்வு தேர்வு மாற்று அல்ல. எனவே, தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அதற்கான அட்டவணையை அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும்.
The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு அட்டவணை உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.