தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது

 

அரியலூர், நவ.6:அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ;அண்ணல் அம்பேத்கர் விருது 2023-2024ம் ஆண்டிற்கு (ஜனவரி-2024க்கு) திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இவ்விருதானது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஆகியோர்களில் சிறந்தோருக்கு “அண்ணல் அம்பேத்கர் விருது” வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதினை பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் அல்லது தனிவட்டாட்சியர் (ஆதிந), அரியலூர், உடையார்பாளையம், அலுவலர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதற்கான ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நவம்பர் 10ம்தேதி மாலை 5 மணிக்குள் கிடைத்திடும்படி அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது appeared first on Dinakaran.

Related Stories: