தமிழ்ச் சுவடியியல் பட்டயப் படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தினை www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் ரூ.3200. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி. வயதுவரம்பு கிடையாது.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்). ஏப்ரல் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எழுத்து தேர்வு ஏப்ரல் 11ம் தேதி. மேலும் தகவலுக்கு 044-22542992, 96000 21709 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

The post தமிழ்ச் சுவடியியல் பட்டயப் படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: