இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மீனவர் நலனில் அக்கரை கொண்டுள்ள இவ்வரசானது, மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரன சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக இறக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசால் தேசிய மீன்வள கூட்டுறவு இணையத்தின் வழியாக மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத காலமான 01.06.2020 முதல் 18.10.2021 வரை இறந்த 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
The post மீனவர் விபத்து காப்புறுதித் திட்டத்தில் 205 மீனவர்/மீனவ மகளிர் குடும்பங்களுக்கு ரூ. 4.10 கோடி தர தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.