தென்காசி : தென்காசி காசிமேஜர்புரத்தில் இந்தியா கூட்டணி அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம், திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் காங்கிரஸ் பழனிநாடார் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை, மதிமுக சுதா பாலசுப்பிரமணியன், ராமஉதயசூரியன், விசிக பண்பொழி செல்வம், ஜான்தாமஸ், லிங்கம் வளவன், வசந்தகுமார், தமிழ்புலிகள் கடையநல்லூர் சந்திரசேகர், முஸ்லிம்லீக் அப்துல்அஜீஸ், மமக யாக்கூப், சலீம், ஆதித்தமிழர் பேரவை கலிவரதன், திராவிடர் தமிழர் கட்சி கரு.வீரபாண்டியன், மகாலிங்கம், மநீம அய்யாசாமி, மஜக அஜ்மீர், தவாக கணேசன், ஆதிதமிழர் கட்சி பொதிகை ஆதவன், பார்வர்டு பிளாக் சுப்பிரமணியன், தமுமுக அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் அருள் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். 2 மாதங்களுக்கு முன்பு வரை வடமாநிலங்களில் பாஜ மீண்டும் வாய்ப்பு இருப்பது போல் பேசப்பட்டது.
ஆனால் கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமர். முதல்வர் கை காண்பித்தாலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை தேடி தருவதன் மூலம் பிரதமரை தேர்வு செய்வது மக்களாகிய நீங்கள் தான். மத்தியில் அராஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் தான் உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும். தென்காசி, விருதுநகர் தொகுதிகளுக்கும் சேர்த்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விபிஎம் கல்லூரி அருகே நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார். 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்’ என்றார்.
கூட்டத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தனுஷ்குமார் எம்பி, மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, முத்துப்பாண்டி, சேக்தாவூது, ஆறுமுகச்சாமி, சேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை ரஹீம், ராஜேஸ்வரன், சாமித்துரை, தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், சீனித்துரை, வல்லம் திவான்ஒலி, ஜெயக்குமார், சுரேஷ், மகேஷ்மாயவன், நகர செயலாளர்கள் சாதிர்,
வக்கீல் வெங்கடேசன், அப்பாஸ், கணேசன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முத்தையா, பண்டாரம், முத்து, ராஜராஜன், வெள்ளத்துரை, உசேன், சிதம்பரம், கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், வக்கீல் வேலுச்சாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி கிருஷ்ணராஜா, பேச்சிமுத்து, தங்கராஜ்பாண்டியன், ரமேஷ், விவசாய அணி முருகன், வக்கீல்கள் முருகன், முத்துக்குமாரசாமி, கோமதிநாயகம், இஞ்சி இஸ்மாயில், இசக்கிப்பாண்டியன், அண்ணாமலை, கேஎன்எல் சுப்பையா, வீராணம் சேக்முகமது, முத்துக்குமார், அணி துணை அமைப்பாளர்கள் இளைஞரணி ஐவேந்திரன் தினேஷ், சுப்பிரமணியன், அப்துல்ரஹீம், முத்துக்குமாரசாமி,
கரிசல் வேல்சாமி, ராஜேந்திரன், ராமராஜ், சபீக் அலி, பெருமாள்துரை, மோகன்ராஜ், முகையதீன் கனி, இலத்தூர் பரமசிவன், சண்முகநாதன், ஜீவானந்தம், ஸ்ரீதர், மாரியப்பன் கருணாநிதி, சுரேஷ், பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆய்க்குடி சுந்தர்ராஜன், வேணிவீரபாண்டி, சின்னத்தாய், சீதாலெட்சுமிமுத்து, குற்றாலம் பொருளாளர் சுரேஷ், பஞ்.தலைவர்கள் வேலுச்சாமி, சத்யராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரம், செல்வம், ரவி, ஒன்றிய துணை செயலாளர்கள் வாசுதேவன், ஐடிஐ ஆனந்தன், ஆனந்தராஜ், பொருளாளர் இசக்கிப்பாண்டியன், பேச்சாளர்கள் இஸ்மாயில், வெல்டிங் மாரியப்பன், முத்துவேல், வடகரை ராமர், தென்காசி நகர நிர்வாகிகள் ராம்துரை,
பால்ராஜ், சேக்பரீத், பாலசுப்பிரமணியன், மைதீன்பிச்சை, வேல்ஐயப்பன், கல்யாணி, சங்கர்ராஜன், அறங்காவலர் இசக்கிரவி, வேம்பு, சன்ராஜா, மைதீன், சபரி சங்கர், அருணாசலம், முகமதுரபி, அறங்காவலர் வீரபாண்டியன், சுப்பிரமணியன், பாலு, கல்யாணசுந்தரம், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மதிமுக வெங்கடேஸ்வரன், கார்த்திக், ரெங்கசாமி, முஸ்லிம் லீக் செய்யது பட்டாணி, முகமதுஅலி, அபுபக்கர், தமுமுக சுற்றுசூழல் அணி மாநில செயலாளர் நயினார் முஹம்மது, மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், மமக மாவட்ட பொருளாளர் முகம்மது பாசித், தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஆரிப், மசூது, நகர தலைவர் அபாபில் மைதீன், மமக நகரசெயலாளர் ஆதம்பின் ஆசிக், விசிக சித்திக், வர்க்கீஸ், சந்திரன், சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் appeared first on Dinakaran.