×

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் கவுதமன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய பேராசிரியர் ராஜ்கவுதமன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள் – படைப்பு – தன்வரலாறு – விமர்சனம் – மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனை முகமான ராஜ் கவுதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது இணையர் பேராசிரியர் க.பரிமளம், அவரது தங்கை எழுத்தாளர் பாமா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் அறிவுப்புலத்தைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் கவுதமன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Raj Gautaman ,Mu. K. Stalin ,Chennai ,Rajgauthaman ,Maraiveitiya ,Mu K. Stalin ,
× RELATED 1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில்...