தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

சென்னை: குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். மின் நூலகம் 2021 மே மாதம் 1.5 கோடி பார்வையை கடந்தது; 2024 ஜனவரியில் 6.5 கோடி பார்வைகளை பெற்றிருந்தது. தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கான அரிய புதையலாக தமிழ் மின் நூலகம் திகழ்கிறது. www.tamildigitallibrary.in என்ற தமிழ் மின் நூலக இணையதளம் 2017 அக்டோபர். 11-ல் தொடங்கப்பட்டது.

The post தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: