அனைத்து தெரு விளக்குகளையும் எல்.இ.டி விளக்காக மாற்றி அமைத்துதர வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆர்.ஓ வாட்டர் அமைத்துதர வேண்டும். 50வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல கூட்டத்தில் பூங்கா பராமரிப்பு, பொதுக் கழிவறைகள் சீரமைத்தல், குடிநீர் வினியோகம், சாலை சீரமைத்தல், கொசு தொல்லைகளுக்கு தீர்வு, கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள், ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைப்பது, குடிநீர் குழாய் பதிப்பது, திடக்கழிவு அகற்ற பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுது சரிபார்ப்பது, தெரு நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யும் பணி, கொசு ஒழிப்பு திட்டத்திற்கு தேவையான மருந்துகள் பெறுவது, மழைநீர் வடிகால்வாய்கள் சீரமைப்பது, பூங்காக்கள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடியே 64 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ.3.64 கோடியில் வளர்ச்சி பணிகள்: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.