தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ்..!!

தைவான்: தைவான் அதிபர் தேர்தலில் ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ் போட்டியிடுகிறார். கிழக்காசிய நாடான தைவானில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நாட்டிற்கு சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், எதிர் வரும் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தைவான் அதிபர் தேர்தலில் ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ் போட்டியிடுகிறார். தைவான் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட டெரி கோவ் முடிவு செய்துள்ளார். 2019-ல் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகிய டெரி கோவ், அவ்வாண்டில் தைவான் தேர்தலில் போட்டியிட முயன்றார்.

ஆனால் தைவானின் பிரதான எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் 2019-ல் டெரி கோவ் போட்டியிடவில்லை. தற்போது இரண்டாவது முறையாக, அதிபர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியிடம் டெர்ரி கோவ் ஆதரவு கேட்டுள்ளார். சீனா உடனான போரை தவிர்ப்பதற்கு ஒரே வழி, சீனா- அமெரிக்கா இடையேயான பதற்றத்தை குறைக்க வேண்டும். மேலும், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிய வேண்டும்.

சீனா எதிர்ப்பு மனநிலையை கொண்ட ஆளுங்கட்சிக்கு ஓட்டளித்தால், அது ஆபத்தானது என்பதை இளைஞர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். 2024 அதிபர் தேர்தலில் வெற்றி பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று முன்னதாக டெரி கோவ் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்கள் தயாரித்து விநியோகிக்கும் முக்கிய நிறுவனம் ஃபாக்ஸ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஃபாக்ஸ்கான் நிறுவனர் டெரி கோவ்..!! appeared first on Dinakaran.

Related Stories: