இந்தியா, தைவான் இடையிலான வேலை வாய்ப்பு ஒப்பந்தம், அதன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்ஷியும் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தைவான் மக்கள் தொகை முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு இளம் தொழிலாளர்களுக்கு பாற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை பணியமர்த்த முடிவு செய்துள்ள தைவான், இந்தியாவில் இருந்து 1 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த தொழிலாளர் ஒப்பந்தம் தைவான் மீது உரிமை கோரும் சீனாவுடனான புவிசார் அரசியல் பதற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தைவான் முடிவு..வரும் டிசம்பரில் இந்தியாவுடன் கையெழுத்து!! appeared first on Dinakaran.