The post தூய்மை பணி செய்வதாக போஸ் கொடுத்த பாஜ எம்எல்ஏ appeared first on Dinakaran.
தூய்மை பணி செய்வதாக போஸ் கொடுத்த பாஜ எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் பூங்காவில் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொகுதியின் பாஜ எம்எல்ஏ ஜான்குமார், கையில் துடைப்பத்தை எடுத்து பெருக்குவதுபோல் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ‘எடுத்துட்டீங்களா சீக்கிரம் எடுங்க….’ என்று சொல்லி அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.