×
Saravana Stores

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யஅனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் பணியமர்த்த பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் வழக்கில் இருந்து ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19ம் தேதி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்துஅவர் தாக்கல் செய்த ேமல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சந்தீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,’பைப்பாஸ் சிகிச்சை என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் சாரணமாக ஆகிவிட்டது. இதனை நாங்கள் கூகுளில் பார்த்து விவரமாக தெரிந்து கொண்டோம்.

அதனால் இந்த விவகாரத்தில் மருத்துவ ரீதியிலான ஜாமீன் வழங்க எந்த முகாந்திரமும் கிடையாது’’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள்,’செந்தில் பாலாஜி தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதனை தகுதியின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும் உத்தரவிட்டு, செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Senthil Balaji ,New Delhi ,Minister Senthil Balaji ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...