×

ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி : ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியது. இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரானா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வேளி ஆராய்ச்சி மையத்தில்
இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. சூரியனை ஆய்வு செய்ய, இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா – எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது . இதற்கு உறுதுணையாக இருந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள் . மனிதகுலத்தின் நலனுக்காக, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,ISRO ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...