×

கோடைக்கால பயிற்சி முகாம் துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நீச்சல் குளத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டுத்துறை நீச்சல்குளம் உள்ளது. இங்கு, கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. வரும் ஜூன் 4ம் தேதி வரை 4 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தலா 12 நாட்கள் வீதம் முகாம் நடைபெறுகிறது. இதில் சேர அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12 நாள் பயிற்சிக்கு ₹1,200 கட்டணமாக செலுத்த வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். காலை 8 மணி முதல் பயிற்சி துவங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தெரிவித்தார்.

The post கோடைக்கால பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Collector Office Perunditta Complex ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...