- குமாரபாளையம்
- ஐக்கிய மாநிலங்கள்
- வெனிசுலா
- ஜனாதிபதி
- நிக்கோலா மடுரோ
- பொதுவுடைமைக்கட்சி
- ஐக்கிய
- மாநிலங்களில்
குமாரபாளையம், ஜன. 7: வெனிசூலா நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்துள்ளது. இதை சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபரை கைது செய்த அமெரிக்காவை கண்டித்து, குமாபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் கணேஷ்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, தொழிற்சங்க தலைவர் ஆலா கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கில் கார்த்திகேயன், இளைஞர் பெருமன்றம் வட்ட துணைச்செயலாளர் ரஞ்சித்குமார், கட்சி நிர்வாகிகள் மோகன், சரவணன், பாலசுப்பிரமணியம், அம்சவேணி உள்ளிட்டோர் பங்கேற்று அமெரிக்காவின் அத்துமீறலை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
