×

அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு

நாமக்கல், ஜன. 6: மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஒற்றுமையை வளர்ப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் நீதிராஜா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் ஆனந்தகுமார் உறுதிமொழியை வாசித்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். மோகனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ‘ஒற்றுமையை வளர்ப்போம்’ என்ற உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் பிரேமலதா, சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் சங்கர், சிறப்பு பயிற்றுனர்கள் மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ் செல்வி, வனிதா, இயன்முறை மருத்துவர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,Mohanur Government Boys' ,Higher Secondary ,School ,School Principal ,Neethiraja ,Regional Coordinator ,Tamilarasi ,Special ,Ananthakumar ,
× RELATED பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்