சுமங்கலா ஸ்டீல்ஸ் ஊக்கத்தொகை திட்டத்தில் “உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்”

சென்னை: ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே தான் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் முன்னேறுவதற்காக போதுமான ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வியை ஊக்குவிக்கின்றனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் டிஎம்டி கம்பிகளை உருவாக்கி விற்பனை செய்யும் சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின்(CSR) கீழ் பிரத்தியேகமான ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றனர்.

கல்வி தொடர்பாக ‘உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்’ எனும் திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. நன்கு படிக்கின்ற பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படிப்பதற்கு இவர்கள் வழங்கும் ஸ்காலர்ஷிப் பெரிதும் உதவியாக இருக்கிறது. சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனம் தாங்கள் அடைந்த பலனை சமூகத்திற்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியும், மற்றும் நல்ல தரமான கல்விக்கு உதவுவதன் மூலம் வறுமை சூழலை மாற்ற முடியும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

The post சுமங்கலா ஸ்டீல்ஸ் ஊக்கத்தொகை திட்டத்தில் “உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்” appeared first on Dinakaran.

Related Stories: