ஒன்றிய அமைச்சர்களின் வெற்றி, தோல்வி

1. அமித்ஷா: குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் வேட்பாளர் சோனல் படேலை விட 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2. ராஜ்நாத்சிங்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

3. நிதின்கட்கரி: நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வெற்றி பெற்றார்.

4. பியூஷ்கோயல்: வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் 3.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

5. கிரண் ரிஜிஜூ: புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சலபிரதேசம் மேற்கு தொகுதியில் 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

6: அர்ஜுன் ராம் மேக்வால்: ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பிகானர் தொகுதியில் 55 ஆயிரம் ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றார்.

7. கஜேந்திர சிங் ஷெகாவத்: ஜோத்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் 1.14 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

8. மன்சுக் மாண்டவியா: குஜராத்தின் போர்பந்தரில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 3.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

9. தர்மேந்திரபிரதான்: ஒடிசாவின் சம்பல்பூரில் பிஜு ஜனதா தளத்தின் (பிஜேடி) பிரணாப் பிரகாஷ் தாஸை எதிர்த்து ேபாட்டியிட்ட கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 1.15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

10:கிஷன்ரெட்டி: ஒன்றிய கலாச்சார அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

11.ஸ்மிருதி இரானி: 2019ல் ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இரானி, காந்தி குடும்பத்தின் உதவியாளரான காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

12.ராஜீவ் சந்திரசேகர்: கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சசி தரூரிடம் தோல்வியடைந்தார்.

13.பூபேந்தர் யாதவ்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், முதல்முறையாக மக்களவை தேர்தலில் ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் லலித் யாதவை 48,282 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

14.அனுராக் தாக்கூர்: ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் சத்பால் ரைசாதாவை 1,82,357 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

15. அஜய் மிஸ்ரா: உபி மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா சமாஜ்வாதி கட்சியின் உட்கர்ஷ் சர்மாவை விட 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார்.

16. எல். முருகன்: ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராஜாவிடம் தோல்வி அடைந்தார்.

17. அர்ஜுன் முண்டா: ஜார்க்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதியில், பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவை விட 1.49 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

18. கைலாஷ் சவுத்ரி: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ராஜஸ்தானின் பார்மரில் காங்கிரஸ் வேட்பாளர் உம்மடா ராம்பெனிவாலிடம் 4.17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

19:புருஷோத்தம் ரூபாலா: குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா 4.65 லட்சம் ஓட்டுகள் முன்னிலை பெற்றார்.

20.ராவ் சாகேப் தன்வே: மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா தொகுதியில் களம் இறங்கிய ஒன்றிய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவிடம் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

21.சுபாஷ் சர்க்கார்: மேற்குவங்க மாநிலம் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை இணையமைச்சர் சுபார் சர்க்கார் 32 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திரிணாமுல் வேட்பாளர் அரூப் சக்ரவர்த்தியிடம் தோல்வியடைந்தார்.

22. நிதிஷ் பிரமணிக்: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நிதித் பிரமணிக் மேற்குவங்க மாநிலம் கூச்பெகர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் ஜெகதீஷ்சந்திராவிடம் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.

23. சாந்தனு தாக்கூர்: ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர் மேற்குவங்க மாநிலம் பங்கான் தொகுதியில் 73 ஓட்டுகள் முன்னிலை பெற்றார்.

24: வீரேந்திரகுமார்: ஒன்றிய அமைச்சர் வீரேந்திரகுமார், மபி மாநிலம் திகாம்கார்க் தொகுதியில் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பெற்றார்.

25. சஞ்சீவ்பல்யாண்: ஒன்றிய கால்நடைத்துறை இணையமைசர் சஞ்சீவ்பல்யாண் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக்கிடம் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

The post ஒன்றிய அமைச்சர்களின் வெற்றி, தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: