இதில் பண்ருட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்ததில் 5 கிலோ தரமற்ற சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சிக்கன் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. இதேபோல் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 2 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3 ஓட்டல்களில் சவர்மா தயார் செய்யும் இடம் சுகாதாரமின்றி இருந்ததை பார்த்த அதிகாரிகள், அந்த ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஓட்டல்களில் சவர்மா தயார் செய்யும் இடங்களில் சுகாதாரமின்றி இருந்ததாக விருத்தாசலத்தில் 3 ஓட்டல்களுக்கும், புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பில் 5 ஓட்டல்கள், கடலூரில் 4 ஓட்டல்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
The post தரமற்ற முறையில் சவர்மா தயாரிப்பு; கெட்டுப்போன கோழிக்கறி பறிமுதல்; கடலூர் மாவட்டத்தில் ஓட்டல்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.