×

பிரபல பல்கலைகழகங்களில் படித்தும் பயனில்லை அமெரிக்காவில் தலைதூக்கும் வேலையில்லா திண்டாட்டம்: படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தி வௌியாகி உள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் மே 2025 என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வௌியிட்டுள்ளது. அதில், “அமெரிக்காவில் ஹார்வர்ட் போன்ற புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் அண்மையில் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் அவதிப்படுகின்றனர். தேசிய அளவிலான இந்த வேலை வாய்ப்பின்மை விகிதத்தில் 22 முதல் 27 வயது வரையுடைய பட்டதாரிகள்.

அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக வேலை வாய்ப்பின்மை 12 சதவீதமாக அதிகரித்து உள்ளது. செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் புதிதாக ஆள்களை பணிக்கு எடுப்பதில்லை. அதன்படி கடந்த 2022ம் ஆண்டிலிருந்து தற்போது வரை கணினி அறிவியல், கணித பாடப்பிரிவுகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பிரபல பல்கலைகழகங்களில் படித்தும் பயனில்லை அமெரிக்காவில் தலைதூக்கும் வேலையில்லா திண்டாட்டம்: படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : America ,Washington ,Oxford Economics ,Harvard ,America… ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...