×

ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி

 

சிட்னி: ஆஸ்திரேலியத் தாக்குதலில் 16 பேர் பலியான நிலையில், சம்பவத்தின் போது துணிச்சலாகச் செயல்பட்டுப் பல உயிர்களைக் காப்பாற்றிய பழக்கடை உரிமையாளருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கத் தொழிலதிபர் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரை ஆர்ச்சர் பூங்காவில் நேற்று ‘ஹனுக்கா’ பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 50 வயது தந்தையும், 24 வயது மகனும் தங்கள் கைவசம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக மக்களை நோக்கிச் சுட்டதில் 10 வயது சிறுமி உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களில் தந்தை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலின் போது, அங்கு பழக்கடை நடத்தி வரும் சிரியா வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமியரான அகமது அல் அகமது, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துப்பாக்கியால் சுட்டவரை பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தார்.

இந்த மோதலில் அவரது கை மற்றும் தோள்பட்டையில் இரண்டு முறை துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது இந்தத் துணிச்சலான செயலால் தான் மற்றவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று ஆஸ்திரேலியப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரரும் அமெரிக்கத் தொழிலதிபருமான பில் அக்மேன், அகமதுவின் வீரச்செயலைப் பாராட்டியுள்ளதோடு அவருக்குப் பெரும் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘அகமதுவின் வீரம் மிக்க செயல் போற்றுதலுக்குரியது; அவருக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்
படும்’ என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அகமது நடத்தி வரும் பழக்கடையை அவருக்கே சொந்தமாக வாங்கித் தருவது போன்ற உதவிகளைச் செய்ய பில் அக்மேன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதங்களைக் கடந்து யூதர்களைக் காப்பாற்றிய அகமதுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்்கிடையே தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களின் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றிச் செயலிழக்கச் செய்தனர். மேலும் அந்த காரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ெகாடிகள் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன. அதனால் இதனை தீவிரவாத சம்பவமாக கருதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : SYDNEY ,ATTACK ,Ponty Beach Archer ,Sydney, Australia ,
× RELATED அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்ற...