சென்னை: கோடநாடு வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். எதிர் தரப்பு சாட்சி 9 பேரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் அனுமதிக்காததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு உட்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
The post கோடநாடு வழக்கு: அறிக்கையை தாக்கல் செய்ய போலீசுக்கு செப்.21 வரை அவகாசம் appeared first on Dinakaran.