×

கார்-வேன் மோதலில் எஸ்எஸ்ஐ பலி

திருவெறும்பூர்: திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனி முருகவேல் நகரை சேர்ந்தவர் திருக்குமரன்(55). திருச்சி மாநகர போக்குவரத்து எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவர் புதுக்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு காரில் வந்தார். திருச்சி நவல்பட்டு ரிங்ரோடு பரணி கார்டன் அருகே, மதுரையில் மாநில சிலம்ப போட்டியில் பங்கேற்று விட்டு 21 பேர் வந்த வேனும், காரும் கண் இமைக்கும் நேரத்தில் ேமாதிக்கொண்டன.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி திருக்குமரன் அதே இடத்தில் பலியானார். தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீசார் திருக்குமரன் உடலை 3 மணி நேரம் போராடி மீட்டனர். வேனில் வந்தவர்களில் 3 பேர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

The post கார்-வேன் மோதலில் எஸ்எஸ்ஐ பலி appeared first on Dinakaran.

Tags : SSI ,Thiruverumpur ,Thirukumaran ,Murugavel Nagar ,LIC Colony ,K.K. Nagar ,Trichy ,Trichy Municipal Transport ,Pudukkottai ,Bharani Garden ,Trichy Navalpattu Ring Road ,Dinakaran ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...