பசலைக்கீரை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

நெய் – 2 டீஸ்பூன்
பசலைக்கீரை – 2 கப்
கடலை மாவு – 1/2 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2-3 டேபிள் ஸ்பூன்
எள்ளு விதைகள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, கடலை மாவு, கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, சீரகம் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு கையில் எண்ணெயைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி 8-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி பாத்திரத்தைத் திறந்து, கொழுக்கட்டைகளை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், இந்த கொழுக்கட்டைகளைப் போட்டு 2 நிமிடம் மொறுமொறுப்பாகும் வரை ப்ரை செய்து, மேலே எள்ளு விதைகளைத் தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான பசலைக்கீரை கொழுக்கட்டை தயார்.

The post பசலைக்கீரை கொழுக்கட்டை appeared first on Dinakaran.