மணிப்பூர் குக்கி பழங்குடியினரின் கோரிக்கையை பரிசீலிக்க விசிக வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து நேரில் கண்டறிய இந்தியா கூட்டணியின் 21 எம்.பிக்கள் கொண்ட குழு அங்கு சென்று கள நிலவரத்தை அறிந்தது. வன்முறையில் குக்கி, மெய்டீஸ் ஆகிய இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். குக்கி மக்கள் இனி மெய்டீஸோடு சேர்ந்து வாழ முடியாது. எனவே குக்கி பகுதிக்கு தனி நிர்வாக அமைப்பு வேண்டும் என்கிறார்கள். இருதரப்புக்கும் இடையே பகைமையும் வெறுப்பும் வலுப்பட்டுள்ளது.

எனவே, குக்கி மக்களின் கோரிக்கையின் படி அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தனி நிர்வாக அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு வழங்கலாமா என்பதை ஆராய குழு ஒன்றை இந்திய ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும். பிரதமர் உடனே மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும்.

The post மணிப்பூர் குக்கி பழங்குடியினரின் கோரிக்கையை பரிசீலிக்க விசிக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: