×

தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது: வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மார்ச் முதல் மே வரையிலான கோடை மழை 97% கூடுதலாக பெய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

The post தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது: வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,Southern ,President ,Amuta ,Chennai ,South Zone ,Meteorological Centre ,Amutha ,Tamil Nadu ,Trithani. m. ,Weather Centre ,Southern Zone ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...