அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 12-ம் தேதியும், ஜனவரி 11-ல் பயணம் செய்ய விரும்புவோர் செப்.13-ம் தேதியிலும், ஜனவரி 12-ல் பயணம் செய்ய செப். 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.
இதேபோல், ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய செப்.15-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
The post பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.