சோனியா, பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு: வழிநெடுகிலும் திருவிழா போன்று அலைமோதிய கூட்டம்

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து நந்தனத்தில் உள்ள திடல் வரை காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், காஞ்சிபுரம் முன்னாள் எம்பியுமான விஸ்வநாதன் விமான நிலையத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்திக்கு சால்வை அளித்து வரவேற்பு அளித்தார். மேலும், காங்கிரஸ் மருத்துவ அணி மாநில தலைவர் கலீல் ரகுமான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதேபோன்று, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் சென்ைன மாநகராட்சி காங்கிரஸ் குழு சார்பில் பனகல் மாளிகை முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ்குமார், ராஜன், சங்கீதா, சுமதி, சுகன்யா, தனலட்சுமி, அமிர்தவர்ஷினி, சுபாஷினி, பானு பிரியா உள்பட சர்க்கிள் தலைவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் இல.பாஸ்கர், மன்சூர் அலிகான் உட்பட ஏராளமானோர் ராஜிவ்காந்தி சிலை அருகே வரவேற்பு அளித்தனர்.

எஸ்சி துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோன்று தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முக்கிய நிர்வாகிகள் முனீஷ்வர் கணேஷ், அக்ராவரம் பாஸ்கர், ஓவிஆர்.ரஞ்சித், அயன்புரம் சரவணன், வடசென்னை ரஞ்சித் உள்பட ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர். மேலும் ஓபிசி பிரிவு மாநில தலைவர் ரவீன் தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலை மேம்பாலம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ஓபிசி பிரிவு துணை தலைவர் ரவிராஜ், கோவை ரமேஷ், மைதிலி, ஜெயராமன், வழக்கறிஞர் கார்த்தி, ஜேக்கப், ஊட்டி கார்த்தி, ஆவடி அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

The post சோனியா, பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு: வழிநெடுகிலும் திருவிழா போன்று அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: