டெல்லி: சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது டெல்லியில் நிதியமைச்சர் நிர்மமா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 52-வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு வரி விகிதங்களில் குறைக்கப்பட்டிருக்கிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதால் சத்தான உணவு பொருட்கள் மக்களை சென்றடையும் என நிர்மலா தெரிவித்தார்.
The post சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.