சிக்கிமுக்கு தேவையான உதவி வழங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் வழங்கிட ஒன்றிணைந்திடுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் துயரில் ஆழ்ந்துள்ள அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போயுள்ள நமது ராணுவ வீரர்கள் மற்றும் பலரது நிலையை நினைத்துக் கவலை கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் வழங்கிட ஒன்றிணைந்திடுவோம். இவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

The post சிக்கிமுக்கு தேவையான உதவி வழங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: