ஷுப்மன் கில் 24

இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ஷுப்மன் கில் நேற்று தனது 24வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார். கிரிக்கெட் பிரபலங்கள், பிசிசிஐ நிர்வாகிகள், ரசிகர்ககள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 2019ல் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் (ஹாமில்டன், ஜன. 31) அறிமுகமான கில், இதுவரை 18 டெஸ்டில் 966 ரன் (அதிகம் 128, சராசரி 32.20, சதம் 2, அரை சதம் 4), 29 ஒருநாள் போட்டியில் 1514 ரன் (அதிகம் 208, சராசரி 63.08, சதம் 4, அரை சதம் 7), 11 டி20ல் 304 ரன் (அதிகம் 126*, சராசரி 30.40, சதம் 1, அரை சதம் 1) எடுத்துள்ளார். 2023 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடரில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிகளைக் குவிக்க உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post ஷுப்மன் கில் 24 appeared first on Dinakaran.

Related Stories: