×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு துணி கடைக்காரர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், குடும்ப சூழ்நிலை காரணமாக எனது 16 வயது மகள், ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் எனது மகளை தனது அறைக்கு அழைத்த கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், துணிக்கடை உரிமையாளரான அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (48) என்பவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு துணி கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Coimbed ,Mundinam Coimbed All Women's Police Station ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...