சண்டிகர்: அரியானாவில் ஷோபா யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் கலவரமாக வெடித்தது. இதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் நூஹ் மாவட்டத்தில் நாளை ஷோபா யாத்திரை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 28ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யாத்திரை குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதும் முடக்கப்பட்டுள்ளது.
The post ஷோபா யாத்திரை எதிரொலி அரியானாவில் 144 தடை இன்டர்நெட் முடக்கம் appeared first on Dinakaran.