பாலியல் வன்முறையில் கர்ப்பமான பெண்ணின் வழக்கில் மெத்தனம்: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

குஜராத்: பாலியல் வன்முறையில் கர்ப்பமான பெண்ணின் வழக்கில் மெத்தனம் என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய உத்தரவு பிறப்பிக்காமல் தாமதம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதிய மருத்துவக் குழுவை இன்றே அமைத்து பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, நாளை அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

The post பாலியல் வன்முறையில் கர்ப்பமான பெண்ணின் வழக்கில் மெத்தனம்: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: