சினிமாவில் உங்களுக்கு ஒரு ரோல் வேண்டுமென்றால் ஆணாக இருந்தால் கமிஷன், பொண்ணாக இருந்தால் வேறு. கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் இந்த சிக்கல் இருக்கிறது. சில நடிகைகள் காதல் என்கிற பெயரில் டைரக்டர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு பின்னாடியும் இதே பிரச்னைதான் இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்திருப்பார்கள். அட்ெஜஸ்ட்மென்ட் தடையாக நிற்கும். தனது பாதுகாப்புக்காக பிடித்தோ, பிடிக்காமலோ இயக்குனருடனோ நடிகருடனோ காதலில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.
இதில், சினிமாவில் நடிக்க குடும்ப எதிர்ப்பை மீறி வந்த பெண்களின் நிலை பரிதாபத்துக்குரியது. அவர்களுக்கு ஆதரவளிக்க யாருமே இருக்க மாட்டார்கள். எனக்கு இந்த தயாரிப்பாளரை தெரியும். இந்த நடிகரை தெரியும் என ஏமாற்றுபவர்கள் ஏராளம். சண்டை காட்சியில் ஒருவருக்கு அடிபட்டால் ஓடுகிறீர்கள். படப்பிடிப்பில் யாராவது காயம் அடைந்தால் பதறுகிறீர்கள்.
ஆனால், உங்களுடன் நடிக்கும் ஒரு நடிகைக்கு பாலியல் சீண்டல் பிரச்னை வந்தால் மட்டும் அதற்கு உதவ யாருமே முன்வருவதில்லை. நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிற விஷால், கார்த்தி மாதிரி இளைஞர்களாவது இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். பாலியல் விவகாரம் பற்றி தைரியமாக நடிகைகள் பேசினாலும் அவர்களை முன்னணி நடிகர்கள் ஆதரிப்பதில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பதில்லை. இவ்வாறு விசித்ரா கூறினார்.
The post பாலியல் பிரச்னை பற்றி பேசும் நடிகைகளை முன்னணி நடிகர்கள் ஆதரிப்பதில்லை: நடிகை விசித்ரா புகார் appeared first on Dinakaran.