சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த தகவலின் படி, கரூரில் உள்ள சகோதரர் அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அதைதொடர்ந்து சகோதரர் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகும் படி சம்மனை வீட்டில் ஒட்டிவிட்டு அதிகாரிகள் வந்தனர். செந்தில் பாலாஜியிடம் நேற்று 3வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, 60 சொத்து ஆவணங்கள் குறித்து செந்தில் பாலாஜியிடம் கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு அவர் அளித்த தகவலின் படி, கரூர் ராம்நகரில் உள்ள சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு யாரும் இல்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலாவை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் வீட்டின் முன்பு ஒட்டிவிட்டு வந்தனர்.
The post செந்தில் பாலாஜியிடம் 3வது நாளாக விசாரணை சகோதரர் மனைவி நிர்மலா நேரில் ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.