×

சங்கி என்பதால் கவலையில்லை: – தமிழிசை பேட்டி

மதுரை: சங்கம் சங்கி என்பதால் கவலைப்படவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனாலேயே எங்களை சங்கிகள் என்கிறார்கள். அதற்கு நாங்கள் கவலைப் படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. அமித்ஷா மதுரை வருகை, எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. புதிய நிர்வாகிகளுக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சுவதற்காக அமித்ஷா வந்துள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடைபெறும் என பிரதமர் அறிவித்ததும், தொகுதி மறுவரையால் பாதிப்பு ஏற்படும் என்று பரப்புகின்றனர். எங்களை ஒட்டாத கூட்டணி என்கின்றனர். எங்கள் கூட்டணி ஒட்டும் கூட்டணி. ஓட்டுக்கான கூட்டணி, நாட்டுக்கான கூட்டணி. இவ்வாறு கூறினார்.

The post சங்கி என்பதால் கவலையில்லை: – தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamilisai Soundararajan ,BJP ,Madurai Meenakshi Amman temple ,Madurai Sangami ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...