சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற 365 கிலோ தங்க நகைகளை தரம் பிரித்து எடை போடும் பணி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ தலைமையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது.
இப்பணியில் 3 மண்டல செயல் அலுவலர்கள், சமயபுரம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் முன்னிலையில் 25க்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து 10 நாள் இப்பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ கூறுகையில், ‘‘அரசு ஆணை கிடைத்தவுடன் தங்கங்கள் அனைத்தும் ஸ்டேட் வங்கி மூலம் மும்பை அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 365 கிலோ தங்கம் அளவீடு பணி appeared first on Dinakaran.