- நம்ம கொளத்தூர்
- நம்மா
- அமைச்சர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- கொளத்தூர்
- நம்ம முதல்வர் போட்டோ
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், செயல்படுத்திய திட்டங்கள், மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பற்றி விளக்கும் ‘நம்ம கொளத்தூர், நம்ம முதல்வர்’ என்ற புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி, அரிச்சந்திரா மைதானத்தில், திமுகவின் வரலாறு மற்றும் சாதனைகள், மக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கும் வகையில், திராவிடர் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி விழாப் பேருரையாற்றினார். ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட இளம் பேச்சாளர்களான கோகுல் மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகியோரது உரையுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று நேரில் வருகை தந்து, இளம் பேச்சாளர்களின் உரைகளை கேட்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், செயல்படுத்திய திட்டங்கள், மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பற்றி விளக்கும் ‘நம்ம கொளத்தூர், நம்ம முதல்வர்’ என்ற புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கிரிராஜன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளைப் பற்றி விளக்கும் நம்ம கொளத்தூர், நம்ம முதல்வர் புகைப்படக் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் appeared first on Dinakaran.