×
Saravana Stores

படவாய்ப்புகள் இல்லை என்பதற்காக பாஜ எடுக்கும் படத்தில் நடிக்க முடியுமா? நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல்

சென்னை: சினிமா துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நடிகை கஸ்துாரி பேசியது மிகப்பெரிய தவறு. தமிழகத்தில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கவில்லை. மாறாக பாஜவில்தான் நடக்கிறது. அதனால்தான் பாஜவில் இருந்து விலகிவிட்டேன். 10 ஆண்டு பாஜவில் இருந்து பட்டபாடு போதும்.

எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை. கட்சிக்குதான் நான் தேவை. அரசியல் மற்றும் தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது. 10 ஆண்டுகளாக படவாய்ப்பு இல்லை என்பதற்காக, பாஜ எடுக்கும் படத்தில் நடிக்க முடியுமா? பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் திமுவுக்கு பிரசாரம் செய்வேன். பிராமணர்கள் அல்ல, யாருமே தமிழக பாஜவை நம்புவது வீண். தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

முன்னதாக, சினிமா துறையில் உள்ள டப்பிங் சங்கத்தில் முறைகேடு செய்து உறுப்பினர்களை பழிவாங்கும் நடிகர் ராதாரவி, ஏறத்தாழ ரூ.2 கோடி வருமானம் உள்ள டப்பிங் சங்க கட்டிடம் இடிக்கப்பட காரணமாக இருந்தார். அரசியல் உள்நோக்கத்தோடு தன்னை பழிவாங்குவதாக ராதாரவி கூறி வருகிறார். தமிழக அரசு சினிமா தொழிலாளர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது. இதையும் ராதாரவி தவறாக பேசி வருகிறார். தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளிடம் எஸ்.வி.சேகர் மனு அளித்தார்.

The post படவாய்ப்புகள் இல்லை என்பதற்காக பாஜ எடுக்கும் படத்தில் நடிக்க முடியுமா? நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Baja ,SV Shekhar ,CHENNAI ,Tamil Nadu Labor Welfare Department ,Chennai Chief Secretariat ,Kasthuri ,Brahmins ,Tamil Nadu ,
× RELATED பிராமணர்களுக்கு எதிரான இனப்படுகொலை...