லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கோஷி தொகுதி எம்எல்ஏ தாரா சிங் சவுகான். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை சனிக்கிழமையன்று ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் பாஜவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், மாநில பாஜ தலைவர் புபேந்திர சிங் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். இவர், பாஜவில் இருந்த இவர் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
The post சமாஜ்வாடி எம்எல்ஏ ராஜினாமா: மீண்டும் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.