பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தைக்கு கார்த்திகை மாதம் துவங்கியதால், கேரள வியாபாரிகள் வருகை குறைந்து மாடுகள் விற்பனை மந்தமாக நடந்தது. பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு கடந்த மாதத்தில் இருந்து மாடுகள் வரத்து அதிகளவு இருந்தது. மேலும் சந்தைக்கு கேரள வியாபாரிகள் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் ஏராளமானோர் வந்தனர். இதனால், மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. ஆனால், இந்த வாரம் இன்று நடந்த சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து மாடுகள் வரத்து ஓரளவு இருந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் துவங்கியதால், கேரள வியாபாரிகள் வருகை குறைந்தது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இருந்த போதிலும், விற்பனை மந்தமானது. இதனால், பசுமாடு ரூ.25 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.33 ஆயிரம் வரையிலும், நாட்டு காளைமாடு ரூ.45 ஆயிரம் வரை என, கடந்த வாரத்தைவிட ஒவ்வொரு மாடுக்கும் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை குறைந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கார்த்திகை மாதம் துவங்கியதால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.