சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 

 

ஆண்டிபட்டி, ஏப். 26: ஆண்டிபட்டி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றம் விழா விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டிபட்டி நகரில் சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 8 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொடி ஏற்றத்திற்கு முன்னதாக முத்துமாரியம்மன் கோயில் முன்பு யாகசாலை வேள்வி வேத மந்திரங்கள் ஓத பூர்ணா குதி நடைபெற்றது.

வாஸ்து சாந்தி செய்யப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் வெண்பட்டில் அம்மன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சக்கம்பட்டி பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ராமதிலகம், ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் கோயில் பணியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

 

The post சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: