காலை 8.30 மணியளவில் கன்டோன்மென்ட் பகுதி பாரதியார் சாலையில் சென்றபோது டிரைவர் கணபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிக்கவே பஸ் தாறுமாறாக சென்றது. பயணிகள் அச்சமடைந்து அலறினர். அப்பகுதியில் இருந்த தனியார் பள்ளி நுழைவாயில் அருகே டெலிபோன் கம்பம் மற்றும் அருகில் இருந்த ஒரு கடை மேற்கூரை மீது மோதி பஸ் நின்றது. அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் காயமின்றி தப்பினர்.
கன்டோன்மென்ட் போலீசார் வந்து டிரைவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், டிரைவர் கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
The post ஓடும் பஸ்சில் மாரடைப்பு; டிரைவர் பரிதாப சாவு: பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.